நீதி சாத்தான்!

வயிறு எரிய
மனசு அழ
கண்ணில் கண்ணீர்

கவிதையில் ரத்தம்

கூடவே இருந்து குடும்பம் நடத்தி
துரத்தித் துரத்திக் காதலித்ததுணை-ஐ
ஆத்திரத்தில் அம்மி தூக்கிச் சாகடித்தவருக்கு
ஆயுள் தண்டனையோ
மரண தண்டனையோ

நச்சுக் காற்றை வியாபாரம் செய்தவனுக்கு
நன்றிக்கடனாக
மூச்சுக்காற்று

குற்றுயிரும் குலைவுயிருமாய்
எழுந்த ஓலங்கள் இன்னும் செவிகளில்...

நோய் கொண்ட பலூன்களாக
நுரையீரல்கள்

கண்களில் பிரளய மின்னல்கள்

கொத்துக்கொத்தாய் நோய்க்கிருமிகள் குடிகொள்ள
இழவின் கனம் தாங்காமல்
இற்று விழுந்த இதயங்கள்

எந்த உறுப்புமே இன்றி
வெற்றுக் கார்ர்ரால் நிரம்பிய சிசுவை
எத்தனை யுகங்கள் ஈனவேண்டும்
எம் இந்தியத்தாய்கள்?

அன்றைய இரவு இன்னும் விடியாமல்...

அறுந்த உயிர்களைத் தொங்கவிட
இந்திய வரைபடக் கோடுகளில் இடமில்லை.

வோவொரு இந்தியனின்
அடிவயிற்றில் புரளும்
அக்கினி கேட்கிறது....
ஆண்டர்சன் எங்கே?

வெள்ளை மாளிகையின் நிழலில்
ஒளிந்துகொண்ட கருப்பு அனகோண்டாவாக
ஆண்டர்சன்!

திருட்டு விமானம் ஏறிச்சென்ற
நீதி திரும்பவே இல்லையா?

இருபதாயிரம் சடலங்களில்
ஏதேனும் ஒன்றிலாவது எழுதிவையுங்கள்...
நீதி தேவதையா?
நீதி சாத்தானா?
------------------------------------------------------------நா.வே. அருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்