கவிதை
அப்பாக்களின் காலம்
அடிக்கடிச் சிரிக்கும்
பக்கத்து வீட்டுப் பெண்
அடக்கி வைக்கப் பழகுகிறாளாம்
சிரிப்பை.
சிரிப்பு மனசோடும் உதட்டோடும் சம்பந்தப்பட்டதென
ஊறிக்கிடந்த எனக்குள்
அதிர்ச்சி உறைத்தது
அவள் சொன்ன சொல்லில் சூடு பறக்க.
பெண்ணாகப்பட்டவள் சிரிபபதற்குச்
சில இலக்கணங்கள் இருக்கிறதென்றும்
எந்தெந்த நேரத்தில்
யார் யார் முன்
எந்தெந்த விதத்தில்
சிரிக்கலாம் என்று
வாழ்நாள் முழுக்க
வகுப்பெடுக்கிறார்களாம் வயசுக்கு வந்த பெண்களின் அம்மாக்கள்
முக்கியமாய்
அப்பாக்களின் அறிவுரைகளின் பேரில்.
ஆதித்தாத்தா
கோமணத்தில் முடிந்துவைத்த
முள்ளுச்செடிகள்
மண்டிக்காடாகி இருக்கும்
மனப் பிரதேசம் முழுக்க.
நா வே அருள்
அடிக்கடிச் சிரிக்கும்
பக்கத்து வீட்டுப் பெண்
அடக்கி வைக்கப் பழகுகிறாளாம்
சிரிப்பை.
சிரிப்பு மனசோடும் உதட்டோடும் சம்பந்தப்பட்டதென
ஊறிக்கிடந்த எனக்குள்
அதிர்ச்சி உறைத்தது
அவள் சொன்ன சொல்லில் சூடு பறக்க.
பெண்ணாகப்பட்டவள் சிரிபபதற்குச்
சில இலக்கணங்கள் இருக்கிறதென்றும்
எந்தெந்த நேரத்தில்
யார் யார் முன்
எந்தெந்த விதத்தில்
சிரிக்கலாம் என்று
வாழ்நாள் முழுக்க
வகுப்பெடுக்கிறார்களாம் வயசுக்கு வந்த பெண்களின் அம்மாக்கள்
முக்கியமாய்
அப்பாக்களின் அறிவுரைகளின் பேரில்.
ஆதித்தாத்தா
கோமணத்தில் முடிந்துவைத்த
முள்ளுச்செடிகள்
மண்டிக்காடாகி இருக்கும்
மனப் பிரதேசம் முழுக்க.
நா வே அருள்
கருத்துகள்
கருத்துரையிடுக