இடுகைகள்

நிதி நீட்டினால் நீதி 

உயிர்

உயிர் எல்லோரும் வாழப்பிறந்தவர்கள்.  ஏன் சிலர் கொடூரமான முறையில் சாகடிக்கப்படுகிறார்கள்?  அவர்களுக்கான வாழ்வுரிமையைப் பறிக்க யார் அதிகாரம் தந்தது? சட்டம் கையாலாகாமல் தவிக்கிறபோது  கவிதை சில கேள்விகளை முன்வைக்கிறது.  முடிந்தவர்கள் பதில் சொல்லட்டும். அருணா ஷான்பாக் அவர்களுக்கு இப்படித்தான் என்னால் அஞ்சலி செலுத்தமுடிகிறது.  வரிசையாய் வார்த்தைகளை நிற்க வைக்கிறேன்.  நீங்களும் வாருங்கள்.  சேர்ந்து நிற்போம்.... அருணா ஷான்பாக் யார்? கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்தவர்.  அல்திபூர் கிராமத்தில் வசித்துவந்த ராமச்சந்திரா ஷான்பாக், சீதாபாய் தம்பதிகளின் மகள்தான் இந்த அருணா ஷான்பாக். 2015 மே 18 ஆம் நாள் மும்பையில் உள்ள கிங் எட்வர்டு நினைவு மருத்துவமனையில் 42 ஆண்டு பராமரிப்புச் சிகைச்சைக்குப்பி றகு இறந்துவிடுகிறார். தனது 25 ஆம் வயதில் ஆரம்பிக்கப்பட்ட சிகிச்சை மே பதினெட்டுடுடன் முடிந்துவிடுகிறது...ஆனால் பதிலிறுக்கமுடியாத கேள்விகள் பலப்பல... அருணா ஷான்பாக்குக்கு என்ன நேர்ந்தது?... 1973 நவம்பர் 27 இரவு. வழக்கம்போல அருணா ஷான்பாக்   கிங் எட்வர்டு...
படம்
ஒரு முட்டாளின் மனைவி   என் மனைவிக்கு என் மேல் ரொம்ப கோபம்.  அவள் ரொம்ப நாளாகக் கேட்ட ஒட்டியாணத்தை நான் வாங்கிக் கொடுக்கவில்லையாம்.  மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.  கால் பட்டினி அரைப்பட்டினியாகவே ஓடிக்கொண்டிருந்தது என் கதை.  வாங்கிக் கொடுக்காத காரணத்தையாவது சொல்லியாகணமுன்னு ஒரே ரோதனை. ஒரு நாள் ரொம்பவும் முட்டிக்கிச்சி.  "பொண்டாட்டி ஆசைப்பட்டதைக் கூட வாங்கிக் கொடுக்காத நீ என்னடா புருஷன்" அப்படி இப்படின்னு லபோ திபோன்னு கத்த ஆரம்பிச்சிட்டா.  இப்படியே போனா என்ன ஆகுறதுன்னு "குட்"ட்டைப்  போட்டு ஓடைச்சிட்டேன்.  "தோ பாரும்மா....ஒனக்கு வாங்கிக் குடுக்கக் கூடாதுன்னா இருக்கேன்? என்னைக்காவது ஒருநாளு விட்டிருக்கியா...ஒன் இடுப்பளவு எனக்குத் தெரியுமா என்ன?...ஆனா அன்பை அள்ளி அள்ளிக் கொட்டுறதுக்கு ஒன்  இதயத்தை அளக்கவேண்டிய அவசியமே இல்ல பாத்தியா?...அதான் அன்பா பொழிஞ்சிக்கிட்டு இருக்கேன்" அன்னைக்கு சூரியன் மறையறதுக்குள்ளவே அவ கோபமெல்லாம் போயிடிச்சி.  அவளும் நம்பிட்டா...ஒரு முட்டாளுக்குப் பொய் சொல்லத் தெரியாதுல்ல...
தும்பிக்கை இல்லாத சின்ன யானை உனது வால்குழைப்பில் கதும்பும் அன்பில் குரலடைத்துப்போகும் எனக்கு. ஏன் இவ்வளவு நேரம் என்று இப்படிக் கேட்க முடிந்ததேயில்லை  வீட்டில் யாருக்கும். என்னுடன் தெருவில் நடந்துவர எத்தனை எதிரிகளை எதிர்கொண்டாய் நீ. அதிகமாய்ச் செய்ததில்லை உனக்கு. மீன்கள் எங்களுக்கு மீந்த முள் உனக்கு. பிஸ்கட் எங்களுக்கு பொரை உனக்கு. துரத்தியும் போகாமல் நாங்கள் பேருந்து ஏறியபிறகுதான் வீட்டுக்குத் திரும்புவாய் நீ. சங்கிலி போட்டுக் கட்டிவைத்ததே இல்லை கடைசி வரைக்கும். தீராத ஏக்கம்ஒன்றிருந்தது எனக்கு சட்டென்று யானையாய் மாறி  நடந்துவரவேண்டும் நீ. ஓயாத உன் குரைப்பொலி கேட்ட ஒவ்வொரு இரவும் நன்றாகத் துாங்கியிருக்கிறேன் நீ இல்லாமல் போனஇந்த நிசப்த இரவில் உற்ங்க முடியவில்லை என்னால்.                          (கல்கி 23 நவம்பர் 2014)
படம்
படம்
நாமே எதிரிகள்! அழுது புலம்பவும் அந்நிய மொழி புன்னகை பூக்க புறத்தியான் பற்கள் சிரசுக்குள் செருகும் சிறைக்கம்பிகள் குத்தி முனகும் மூளை. பச்சைக் கிளியாகும் பச்சைத் தமிழன். நாக்கு இழந்தவர்கள் நாடு ஒவ்வொருத்தரும் ஊமை! தாள முடியவில்லை தமிழ்ச் சோகம் தத்தளிக்கிறது தமிழ்த் தேசம்! அன்னிய மொழி இராணுவ ஆயுதப் பொழிவுகள்! பள்ளி கல்லூரிகளில் தமிழ் பதுங்கு குழிகளில்! மொழியை அழிக்க... மூலதனப் புயல் சனாதன சுனாமி உலகமய ஊழி! * வஞ்சிக்கப்பட்ட வரலாறு ... தமிழால் பிழைப்பு நடத்துவோரால் தமிழ் பிழைத்ததென்னும் தகவல் பிழை! தானைத் தலைவர்களின் தமிழ் நேசம் சந்தேகத்திற்கு உரியது... உணர்ச்சிக் களிமண்ணில் உருவம் கொடுத்து கடைசியில் கரைப்பது கடலில்.... தமிழுக்கு ஆயிரம் மாலைகளுடன் அலங்காரம் படுக்க...பாடை! * வியாபாரம் ஆனது விளைநிலம் கொள்ளைக் கொள்முதல் லஜ்ஜையற்ற லாபம் ஆட்சேபமில்லை... அயல்மொழிகள் பள்ளிகள் தோறும் பாடங்கள் ஆகட்டும் வீணை ராகத்திலென்ன விகற்பம்? பாட்டாளிகளுக்குப்  பாஷாணமே... பரிபாஷை ஆகாத பாஷை! தமிழ்வழிக் கல்வியே தாரக மந்திரம் ! ஒவ்வொரு தமிழனின் உ...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தாம்பரம் கிளை நடத்திய "பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள்" கவியரங்கத்தில் தலைமை ஏற்று வாசித்த கவிதையின் இறுதிப்பகுதி... 6 ஆண்டவன் செயலென்று அநீதியை அனுமதித்தோம் அவதாரம் காக்குமென்று ஆனவரை காத்திருந்தோம் கலி முத்திப் போச்சென்று கதை கதையாய்ப் பேசிக்கொண்டோம் எது நடந்ததோ அது நன்றாக நடந்ததாய் எதிர் செயல்களையும் ஏற்றுக்கொள்ளப்பழக்கப்பட்டோம்! மனிதனே தெய்வமென்னும் மகத்தான தத்துவத்தைப் புனிதர்கள் சொல்லுகையில் புளகித்துக் கேட்டிருந்தோம் புரியாமல் விழித்திருந்தோம் இனியேனும் -- செயல்படுகிற சிந்தனை வேண்டும் சிவந்து போகிற கண்கள் வேண்டும் முள்ளிவாய்க்கால் முதல் பாலஸ்தீனம் வரை ஒற்றை உயிருக்கும் உலகம் பதில் சொல்ல... ஐ.நா. சபை நமக்கு அறிக்கை வாசிக்க... ஒவ்வொரு உலகக் குடிமகனும் உரக்கக் குரல் கொடுப்போம் காற்றில் ஏறும் நம் கவிதைக்குதிரைகள் காஸாவில் இறங்கட்டும்... கண்ணுறக்கமற்றுச் செய்வோம் கவிதைச் சவாரி கண்ணடக்கத்தையும் கடிவாளத்தையும் கழற்றி எறிவோம் கொள்ளு தின்னோம் குடிநீர் கொள்ளோம் லஜ்ஜை கொள்வோம் லாயம் பு...