புல்வெளிப் பாலை!
*****************************
தேநீர்க் கோப்பையின் விளிம்புகளில்
தன்னையறியாமல் உறிஞ்சி ருசி காணும்
உதடுகளைப்போல
உன் வரவை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன்.
நீ மௌனத்தை
ஒரு போர்வையைப் போல போர்த்திக் கொண்டாலும்
உன் கறுப்பு வெள்ளைக் கண்கள்
காதலைக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன.
என்னதான்
பாசிக்குள் ஒளிந்து கொண்டாலும்
மேலே வந்துதானே ஆகவேண்டும்
மீன்கள்?
கடும் பனியின் நள்ளிரவில்
உதறலெடுக்கும் வாயினைப்போல
எந்த நேரத்தில்
உனது பெயர் வெளிப்பட்டுவிடுமோ என்று
பயந்துகொண்டுதான் இருக்கிறேன்
நீயோ தொட்டதும்
உடலை உள்ளே இழுத்துக் கொள்கிற
நத்தையைப்போல ஊர்ந்து செல்கிறாய்
லேசான தீண்டலில்
ஒரு மரவட்டையைப் போல
சுருண்டுகொள்கிறாய்.
இவ்வளவு நீளமான விரலுக்கு
அரை விரல்கடை நகம்
அழகு சேர்ப்பதுபோல
உன்னை நான் பார்க்கும்
ஓரிரு நிமிட ஒளிப்பட காலம்
என் ஆயுளையே அர்த்தப்படுத்தி விடுகிறது
நான் மட்டுமென்ன?
உன்னைப் பார்த்ததும்
என்னுள் இழுத்துக் கொண்ட இதயம்
உன் காதல் கதகதப்பில்
வசமிழந்து ஓட்டிலிருந்து வெளிவந்துவிடுமோ என்ற
பயத்திலிருக்கும்
கடல் ஆமை!!
--நா.வே.அருள்
Thanks to Prof. Chintamani Vani for his excellent translation into English.
GRASSLAND DESERT
LIKE THE LIPS
THAT SIP, SAVOUR SPONTANEOUSLY
FROM THE FRINGES OF A TEA-CUP
I HAVE BEGUN TO LOOK FORWARD TO,
AWAITING YOUR ARRIVAL.
THOUGH YOU SWADDLE YOURSELF WITH SILENCE
AS IF IT WERE A BLANKET
YOUR EYES, BLACK-WHITE,
BETRAY YOUR LOVE.
FISH, THAT GO INTO HIDING,
IN THE MOSSY MASS, HOWEVER,
MUSTN'T THEY, PERFORCE, COME UP?
LIKE THE MOUTH THAT SHUDDERS
ON A COLD MURKY WINTRY MIDNIGHT,
I KEEP DREADING WHETHER
YOUR NAME WILL GET REVEALED.
HOWEVER, YOU, LIKE A SNAIL,
THAT DRAWS ITS BODY INWARD
WHEN TOUCHED,
CRAWL ON.
AT A SOFT CARESSING STROKE,
YOU, LIKE A MILLIPEDE,
CURL YOURSELF UP.
AS A NAIL, ONLY HALF A FINGER LONG,
ADDS BEAUTY TO SUCH A LONG FINGER,
THE ONE OR TWO MINUTES
OF A PHOTOCOPIER TIME
THAT I TAKE TO CAST A GLANCE AT YOU
LENDS MEANING TO MY VERY LIFE-SPAN.
WHAT AM I, AFTER ALL?
DREADING IF MY HEART,
DRAWN INWARDS ME,
WILL SNEAK OUT OF ITS SHELL
INVOLUNTARILY
IN THE LUKEWARM HEAT OF YOUR LOVE-
A SEA-TURTLE.
NA. VE. ARUL
( TRANSLATED INTO ENGLISH BY
K. CHINTAMANI)
கருத்துகள்
கருத்துரையிடுக