உலகம்

கம்பனும் புதுமைப்பித்தனும்

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

சும்மா ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாமே என்று தோன்றியது. உடனே ஆரம்பிச்சாச்சு. எனக்கு ப்ளாக் சரிவருமா என்று
கூட யோசிக்கவே இல்லை. யோசிக்காமலே செய்யும் பல காரியங்களில் இதுவும் ஒன்று. யோசித்தவர்களுக்கெல்
லாம் என்ன பலன் கிடைத்துவிடுகிறது? மேலும் உலகிலேயே ஆகப்பெரும் சோம்பேறி நான் என்பது என் அசைக்கமுடியாத கருத்து.

திடீர் என்று திட்டம் இடபடாத திட்டத்தை நிறைவேற்றியாச்சு. சரி. ப்ளாக்=கு என்ன பெயர்
வைப்பது? உடனே எனக்கு ஞாபகம் வந்தது உலகம்தான். உலகம் என்ற வார்த்தை கம்பனின் வரிகளை அழைத்துவந்துவிட்டது. கம்பன் நான்காம் வரியில் (அவர்) தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே என்று ஒரு போடு போடுவார்.
மாதவராஜ் தனது இடுகை தீராதப்பக்கங்களில் கடவுள் பற்றி புதுமைப்பித்தன் கோபாலபுரம் சிறுகதையில் சொன்ன வாசகங்களை நினைத்துக்கொள்கிறேன்.
"மனிதனாவது கடவுளாவது! சீச்சீ! சுத்த அபத்தம்! இதில் தெய்வம் தன்னை வழிபடவேண்டும் என்று மனிதனை எதிர்பார்க்கிறதே, அதைப் போல முட்டாள்தனம் வேறு உண்டா? நான் மட்டும் கடவுளாக இருந்தால், கட்டாயம் இந்த சிருஷ்டித்தொழிலை நெடுங்காலத்துக்கு முன்பே விட்டுவிட்டு தூக்குப் போட்டுக் கொண்டிருப்பேன்”
- கோபாலபுரம் சிறுகதையில் புதுமைப்பித்தன்.
கம்பன் கவிப்பித்தன். விருத்தாசலம் கதைப்பித்தன் அல்லவா? ....சுழலும்

கருத்துகள்

  1. அன்புக்குரிய அருள்

    வலைப்பூ உலகில் நீங்களும் குடியேறுவது எங்களைப் போன்ற வாசகர்களுக்குக் கொண்டாட்டமாகவே இருக்கும். வருக, வாழ்க.

    தவிரவும், உலகம் யாவையும் என்ற பிரசித்தி பெற்ற இராம காதையின் கடவுள் வாழ்த்துப் பாவினை, பத்தாண்டுகளுக்கு முன் எங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அறிக்கை எழுதும் போது வேறு பொருளில் ஏகாதிபத்தியத்தை விமர்சிக்கும் நோக்கில் இப்படி எழுதியிருந்தோம்: உலகம் யாவையும் தமது ஆளுகைக்கு உட்பட்டதாகவும், அதை நிலை நிறுத்திக் கொள்ள எல்லையில்லாத விளையாட்டுக்களில் ஈடுபட்டும் வரும் ஏகாதிபத்தியத்திற்குச் சரண் அடைந்து நிற்கிறார்களே என்று ஆவேசமாக எழுதியிருந்தோம் அதில்.

    வாழ்த்துக்கள்..

    எஸ் வி வி

    பதிலளிநீக்கு
  2. என் அன்புக்குரிய தோழர் அருள் அவர்களே! வலைத்தளத்திற்கு வருக வருக! நான் அன்புடனும் மரியாதையுடனும் நேசிக்கின்ற வெகுசிலரில் நீங்களும் இருக்கின்றீர்கள்! உங்கள் எழுத்துக்களின் நிரம்பி வழியும் அன்பும் மனிதாபிமானமும் உங்களைப்போன்றே ஆர்ப்பாட்டமில்லாத எளிமையானவை ஆனால் வலியவை. தொடர்ந்து உங்கள் பதிவுகளைக் காண ஆவலாய் உள்ளேன்! வாழ்க நீங்கள்!
    இக்பால்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்