கனடா பயணக் குறிப்புகள் சாலை விதிகளும் சமூக விதிகளும் ••••••••••••••••••••••••••••• நா.வே.அருள் கனடாச் சாலைகளில் வலப்புறத் திசைப் பயணங்களாக இருக்கின்றன. நம் நாட்டில் எப்படிச் சாலைகளில் இடப்புறம் போவோமோ அப்படி அங்கு வாகனங்கள் எல்லாமே வலப்புற விதிகளைப் பின்பற்றிப் போய்க்கொண்டிருந்தன. “சாலையில் மட்டுமல்ல, சமூகத்திலும் இடதுபுறம் பாதுகாப்பானது” என்றெல்லாம் இளமையில் கவிதை என்ற நினைப்பில் எழுதிக்கொண்டிருந்த எனக்கு இது ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது. இடதுபுறச் சாலை விதிகள்தான் நமக்குப் பரிச்சயம். நமக்கு மட்டுமல்ல. நம்மைப் போலவே பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் காலனி நாடுகளாக இருந்த ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா நாடுகளிலும் இப்படித்தாம். ஏன் அதன் காலனி நாடான கனடாவிலும் இடதுபுறச் சாலை விதிகள்தாம் இருந்தன. ஏறக்குறைய எழுபத்தைந்து நாடுகளில் இடதுபுற சாலை விதிகள் இருக்கின்றன. உலகின் மொத்த மக்கள் தொகையில் முப்பத்தைந்து விழுக்காட்டு மக்கள் தொகை இடதுபுற விதிகளைப் பின்பற்றுகிறார்கள். இந்தியா, ஆங்காங், புரூனே, வங்காளதேசம், பூட்டான், மலேசியா, பாகிஸ்தா...
இடுகைகள்
2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கலையும் சமூகமும் பிரிக்க முடியாததா? **************************************************************** கலை என்பது என்ன என்கிற கேள்வி காலகாலமாகக் கேட்கப்படுகிற கேள்வி. “ஒரு மனிதன் உள்ளுறைபவனை மற்றொரு மனிதனின் உள்ளத்துக்குக் காட்டுவதுதான் கலை. அது ஒருவனின் உண்மையான பரிச்சயத்தை மற்றவனுக்குக் கொடுக்கிறது. ஒருவனின் மௌனச் செய்தியை மற்றவனுக்குத் தெரிவிக்கிறது. ஒருவனுடைய சுய துக்கங்களின் அனுபவத்தை இன்னொருவன் பெறும்படி செய்கிறது. ஒருவனுக்குரிய செல்வத்தை மற்றவனும் அனுபவிக்க உதவுகிறது…. கலைஞன் ஒரு ரசிகனைக் கற்பனையிலாவது சிருஷ்டித்துக் கொண்டுதான் கலைப்படைப்பில் ஈடுபட முடியும். ஆகவே கலைப் படைப்பு உருவாவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். உருவான பின் எல்லா மக்களுமே அந்தப் படைப்புக்கு உரியவர்களாகி விடுகிறார்கள். கலைஞன் ஒரு பக்கம், ரசிகர்கள் மற்றொரு பக்கம். ரசிகர்களெல்லாருமே கலைஞனுக்கு அந்தரங்கமானவர்கள். கலைஞன் எல்லோரையும் தனக்கு அந்தரங்கமாக்கிக் கொள்ள உதவு...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பயணக் குறிப்புகள் மனம் ஒரு கோவேறு கழுதை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நா,வே.அருள் ~~~~~~~~~~~~~~ உலக வரைபடத்தில் பார்த்துக்கொண்டிருந்த வெளிநாடு ஒன்றில் நேரடியாகக் கால்வைக்க முடியும் என்று கனவுகூட கண்டதில்லை. நம் வாழ்வின் சக்கரங்கள் ஒரு புதைமணலில் சிக்கிக் கொண்டிருக்கும்போது ஆகாயத்துப் பறவைகளை அண்ணாந்து பார்க்க முடிவதில்லை. அதுவும் ஓர் அலுமினியப் பறவை மூலம் பறந்து அண்டை நாட்டுக்குப் போவதென்பது அத்துணை எளிதானதல்ல. ஏதோ என் வாழ்விலும் நிகழ்ந்துவிட்டது. கனடாவின் வான்கூவர் நகரை அடைகிற போது ஒருமுறை மீண்டும் மனம் சென்னையிலிருந்து விமானத்தில் வந்த தருணங்களை அசைபோட ஆரம்பித்தது. சென்னையில் விமானத்துக்குள் ஏறியதும் கைச்சுமைகளைத் தலைக்குமேல் இருக்கும் தாங்கு பெட்டிகளில் வைத்து அடைத்துவிட்டோம். ஒவ்வொரு இருக்கைக்கு எதிரேயும் ஒரு மின்திரை ஒளிர்ந்து கொண்டிருந்தது. காதில் கேட்கும் கருவிகளைப் பொருத்திக் கொண்டு விமானத்தின் பறத்தலைக் கவனிக்கலாம். பருவ மாற்றங்களைப் பார்த்துக் கொண்டு வரலாம். இசையை ரசித்துக்கொண்டு வரலாம். சினிமாக்களைத் திர...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கனடா பயணக் குறிப்புகள் ஓடுதளத்தில் ஒரு பொம்மை விமானம் சென்னை விமான நிலையத்திற்குள் நுழைகிறபோதே பதற்றம் தொற்றிக்கொள்கிறது. இனம் தெரியாத உணர்வு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. வழியனுப்ப வந்தவர்களும் பயணம் செய்ய இருப்பவர்களும் உணர்ச்சியில் ஊஞ்சாலாடிக் கொண்டிருந்தார்கள். காமிரா முன் நின்று போஸ் கொடுப்பவர்களும் கட்டித் தழுவிக்கொள்பவர்களுமாக விமான நிலையம் உணர்ச்சியில் உறைந்து கொண்டிருந்தது. எங்களுக்கு முதல் வெளிநாட்டுப் பயணம். மகன் அருள்பாரதியின் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளத்தான் நானும் என் மனைவி ஹேமாவதியும் கனடாவை நோக்கிப் பறக்க இருந்த காத்தே பசிபிக் விமானத்திற்காகக் காத்திருந்தோம். மகன் அருள்பாரதி சாய்ராம் பொறியியல் கல்லூரியில் கணினித் துறையில் பொறியியலாளராக ஆகிக் கனடாவில் கணினி அறிவியலில் எம் எஸ் படிப்பு. சைமன் பிரேசர் பல்கலைக் கழகம். மேற்படிப்பு முடிய ஆறுமாதம் இருக்கிறபோது மகன் விரும்பிய பெண்ணைத் திருமணமும் முடித்தாயிற்று. அருள்பாரதியும் மருமகள் விஜய்தாவும் இப்போது கனடா வான்கூவர் நகரத்தில் தங்கள் இல்லறத்தைத் தொடங்கியிருக்கிற...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஆசிரியர்கள் இணைந்த போராட்டம் குறித்து சில பரிசீலனைகளும் யோசனைகளும் ******************************************************************** இந்தப் போராட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது என்றாலும் ஒருவிதத்தில் வெற்றியில் முடிந்திருக்கிறது என்றுதான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது. அரசை வழிநடத்துபவர்கள் யாவர் எனக் கடைநிலை வரையிலும் ஆதாரபூர்வமாகத் தெரிவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எப்படி துக்ளக் குருமூர்த்தி முதல் கிரிஜா வைத்தியநாதன் வரையிலும் ஒரு மகத்தான போராட்டத்தை முறியடிக்கத் துரோகப் பங்காற்றினார்கள் என்பதை அனைத்து ஆசிரியர்களும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். சூழ்ச்சிகளின் ஊற்றுக்கண்கள் எங்கெல்லாம் கசிந்துகொண்டிருக்கின்றன என்பவற்றை மக்கள் கண்டுகொள்ள வேண்டிய காலமாக விரைவில் மாற வேண்டும். ஆசிரியர்கள் எவற்றையெல்லாம் கோரிக்கைகளாக வைத்தார்களோ அந்தத் திசைவழி மக்களுக்குப் போய்ச் சேராமல் பள்ளிகளுக்கு அரசு செய்கிற சீர்கேடுகளை எதிர்த்துப் போராடினார்களா என்று சன் நியூஸ் உள்பட போராட்டத்தை சுயநலக் கோரிக்கைகளுக்கானவை என்று திசைமாற்றி விட்டுவிட்டார்கள். ஒரு மகத்தான போராட்டத்துக்குத் து...