கடிதம்
கொள்கலன் எண் 610
உலகிலேயே மிக வலிமைவாய்ந்த குற்றவாளி வாரன் ஆண்டர்சனுக்கு, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு டிசம்பர் இரவில் உயிரிழப்புக்கும், தலைமுறை ஊனத்திற்கும் உயிர்ச்சிதைவு நோய்களுக்கும் ஆளான போபால் நகரத்திலிருந்து கையாலாகாதவன் எழுதிக்கொள்ளும் கடிதம்.
ஞாபகம் இருக்கலாம். அமெரிக்க அரசின் காங்கிரசு, கார் தயாரிக்கும் டொயாட்டா நிறுவன்த்தின் உயர்மட்ட நிர்வாகிகளையும், நிறுவன முதலாளியையும் குற்றம் சாற்றிய கதை. விவரம் இதுதான்…இரு சக்கர வாகனங்களில் குறைபாடு இருந்ததாம். அதனால் அமெரிக்க மக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டால்….
அதற்காகத்தான் டொயாட்டா முதலாளியையும், அலுவலர்களையும் காங்சிரசில் வைத்து சரமாரியாக விசாரித்து வைதார்கள். அமெரிக்கர்களின் தேசப்பற்றுக்கு ஒரு அளவே இல்லையா ஆண்டர்சன்?
இதுவும் ஞாபகம் இருக்கலாம். இருபத்தைண்டாண்டுகளுக்குப் பிறகு 2010 சூன் 7 ஆம் நாள் வெளியான போபால் நச்சுவாயுவைவிட ஆபத்து மிகுந்ததும் ஆச்சரியத்தைக் கொடுத்ததும் உயிரை உலுக்குவதுமான தீர்ப்பு.
தன்னையும் மீறிய தருண்ம் ஒன்றில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, இது தாமதமான, புறக்கணிக்கப்பட்ட தீர்ப்பு மட்டுமல்ல. நீதி புதைக்கப்பட்ட தீர்ப்பு, என்று சூன் 8 ஆம் நாள் எக்கனாமிக் டைம்ஸ் இல் சொன்னது குறிப்பிடத்தக்கது.
மிகவும் ஆபத்தான மீதேல் ஐசோசயனைடுவைப் பயன்படுத்தி செவின், டெமிக் என்கிற பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தயாரிக்கிற ஒரு நிறுவனத்தில் எச்சரிக்கைப்பலகையும் கிடையாது. இந்த ஆலை என்ன தயாரிக்கிறது, எப்படிப்பட்ட ஆபத்தான வாயு சேமிக்கப்பட்டிருக்கிறது என்கிற எந்தத் தகவல்களும் அந்த ஆலை இருக்கிற பெராசியா தெருவாசிகளுக்கும் தெரியாது.
மீதேல் சயனைடு சேமித்து வைத்திருந்த கொள்கலன்களின் எண்கள்.610இ 611 மற்றும் 619. அன்றைய இரவு கொள்கலன் 610-லிருந்து கசிந்த வாயுவைவிட ஆபத்து மிகுந்தது ஆள்பவர்களின் வாயிலிருந்து வெளியான வார்த்தைகள்(?). ஆண்டர்சன், உன்னைத்தப்பிக்க விட்டு அமைதியாக இருந்தது அன்றைய பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம்(?). ஒரு குட்டி ஹிரோசிமா, நாகசாகி பக்கத்திலேயே வாழ்ந்து மரணித்துப் போவதற்குப் பயிற்சி தருகிற நிறுவனத்திற்குப் பெயர் பாராளுமன்றமா?
பார்க்கும் இடங்களிலெல்லாம் மரணங்கள். சந்து பொந்துகளில் சடலங்கள். போபால் நகரமே திறந்தவெளிச் சவப்பெட்டி போலக் காட்சியளித்தது. ஆனால் விசாரணை நடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் ஒரே ஒருமுறையேனும் வழக்குமன்றத்துக்கு வராமலே இருக்க முடிகிறது உன்னால்…. நீ வசிப்பது உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வெள்ளைமாளிககையின் நிழலில்… உலகிலேயே மிகவும் மலிவான ஒரு வழக்குமன்றத்துக்கு நீ வந்தால் என்ன? வராவிட்டால் என்ன?
இருபதாயிரம் கொலைகளைச் செய்துவிட்டு இலட்சோப இலட்ச மக்களின் தலைமுறைகளைச் சிதைத்துவிட்டு இரண்டாண்டுச் சிறைத்தண்டனையோடு தப்பிக்க மனசு வந்திருக்கிறது உனக்கு… உன் கண்களில் இருக்கும் பாவைகள் மனிதகுலத்தின் முற்றுப்புள்ளிகளா? உன் நரைத்த முடிகள் சடலங்கள் போர்த்தும் வெள்ளைத்துணி இழைகளா?
இட்லரின் வதைமுகாம்களுக்கும் உனது நச்சுவாயுத் தொழிற்சாலைகளுக்கும் என்ன வித்தியாசம்? அர்ஜஉன்சிங் உனக்குத் திறந்துவிட்ட பாதுகாப்பான பாதையில் மத்தியஅரசின் ரகசியங்களும் மர்மங்களும் நிறைந்திருக்கின்றன.
உன்னைப்போலவேதான் ஆண்டர்சன், இருபத்தைந்து ஆண்டுகளாக இறந்துபோனவர்களையும் இறப்பின் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருப்பவர்களையும் பார்த்து ஆறுதல் சொல்லவும் நீதிதேவதை எட்டிப்பார்க்கவேயில்லை. து க்குத்தண்டனைக் கைதிகளுக்கும் கடைசி ஆசையைச் சொல்ல வாய்ப்பு இருக்கிறது. போபால் சடலங்களுக்கு…
உனக்கு இதுவும் ஞாபகம் இருக்கலாம். 12 வயதுச்சிறுவன் ஆகாஸ் தன் 15 வயது அண்ணனுடன் யூனியன் கார்பைடு இந்திய நிறுவனத்தின் முன் நின்று உன்னிடம் நேரில் சம்மன் கொடுக்க நின்றான். இதற்கு நீங்கள் வைத்த பெயர் ஜனநாயகம். அவர்கள் உடனடியாக அந்த இடத்தைவிட்டுத் துரத்தப்பட வேண்டும். இதற்கு நாங்கள் வைக்கும் பெயர் சர்வாதிகாரம்.
மொத்தம் 1992 சம்மன்களையும் குற்றப்பத்திரிகைகளையும் உன் தெருவாசலில் இருந்த குப்பைத்தொட்டியிலும் போட அனுமதிக்கவில்லை உனது கஉடாரம். ஜனநாயகத்தைக் கைக்குள் போட்டுக்கொண்டு காந்திய முகமூடி அணிந்த உனது சர்வாதிகாரத் தொண்டரடிப்பொடிகள் (எழுதிப்பிழைக்கும் சில அறிவுஜீவிகள், விலைபோன பத்திரிகை ஜாம்பவான்கள், இத்யாதி) எத்தனையோ தந்திரங்களைக் கையாண்டு பார்த்தார்கள். உச்சமாய்…”இது கார்பைடுத் தொழிலாளிகளின் சதி” என்று புரளி கிளப்பியது உன்னிடம் நிதியுதவி பெற்ற ஒரு ஆய்வுக்குழு.
”சொல்வதற்கு என்ன?... நச்சுக்கழிவுகளை மூன்றாம் உலக நாடுகளில் தள்ளிவிடுகிற பொருளாதாரத்தந்திரம் தவிர்க்க முடியாதது. அதை உலகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” இதைச்சொல்வதற்குமுன் திருவாளர் லாரி சம்மர்ஸ் உலகவங்கியின் தலைமைப்பொருளாதார நிபுணர். சொன்னபின் ஓபாமாவின் தலைமைப்பொருளாதார கருத்துரையாளர். வாழ்வதைவிட பிழைப்பது சுலபம்.
யூனியன் கார்பைடு நிறுவனத்தை டவ் நிறுவனம் எடுத்துக்கொள்கிறபோது ’யூனியன் கார்பைடு நிறுவனத்தின் குற்றத்திற்கு டவ் நிறுவனம் பொறுப்பேற்காது என்று கச்சை கட்டிய அன்றைய நிதியமைச்சர் சிதம்பரமும் வணிக அமைச்சர் கமல்நாத்தும் சமீபத்தில் அமைத்த “போபால் விச வாயு” விசாரணைக் குழுவிலும் இடம்பெறுகிறார்கள். என்னே மத்திய அரசின் மதியூகம்?
ஞாபகம் இருக்கலாம் ஆண்டர்சன். 1996 செப்டம்பர் 13 ஆம் நாள் அன்றையத் தலைமை நீதிபதி ஏ.எம்.அஹமதி அளித்த தீர்ப்பில் சொன்ன வாசகம். “நாமெல்லாம் கார்கள் வைத்திருக்கிறோம். ஒருவேளை எனது ஓட்டுநர் யார்மீதாவது கார் ஏற்றிக்கொன்றால் அரசியல் சட்டத்தின் 304 (பகுதி II) பிரிவின்படி இது கொலைக்குற்றமாகாது”
இதைக்குறிப்பிட்டு எகானமிக் டைம்ஸ் தலையங்கத்தில் எழுதியது…“திருவாளர் அஹமதி அவர்களே, காரினுடைய நிறுத்தக்கட்டையைக் (brake shoes) கழற்றியவரே ஆண்டர்சன்தானே? ”
“செய்திகள் மற்றும் செயற்பாட்டுக்கான போபால் குழு” உறுப்பினர்கள் குமுறுகிறார்கள். “போபால்கள் நிகழும். ஆனால் நாடு முன்னேற வேண்டும்” என்று 2010 சூன் 7 போபால் தீர்ப்புக்குப் பிறகு அவர்களிடம் இந்தியப்பிரதமர் சொன்ன வார்த்தைகள் இவை.
போபால்கள் நிகழும். ஆண்டர்சன்கள் தப்பிப்பார்கள். ஆள்பவர்கள் விமானம் ஏற்றிவிடுவார்கள். எனில் இந்திய மக்கள் எதற்காக? இவர்களுக்கெல்லாம் இந்தியா எதற்காக?
மத்திய அரசு ஆர்வம் காட்டுகிற “அணு பேராபத்திற்கான சமூகப் பொறுப்புச் சட்டம்” எதிர்கால ஆண்டர்சன்களுக்கான பாதுகாப்புத்திட்டம் அல்லாமல் வேறென்ன? ஜமாயுங்கள் ஆண்டர்சன்…
இப்படிக்கு,
மக்களின் மவுடிகத்தை எண்ணி மனங்குமுறும்
போபால் நகரவாசி
பின்குறிப்பு- இந்தியாவுக்கு வரவிருக்கும் எதிர்கால ஹிரோசிமா நாகசாகிக்கான அணுஉலை கொதிகலன்களில் உன்னுடையவை எத்தனை ஆண்டர்சன்?
1 ) நான் பள்ளி செல்லும் வயதில்தான் பெரியன்னை இந்திராகாந்தி நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய எமர்ஜென்சி டிக்ளேர் செய்தார். அப்போதெல்லாம் நானும் நண்பர்களும் இதை வேறு மாதிரி பேசிக்கொண்டிருப்போம். "டே, சர்வாதிகாரம் வருதாண்டாம்! இனிமே நாட்டுல எவனும் லஞ்சம் வாங்க முடியாதாம்! லஞ்சம் வாங்குனா நடுத்தெருவுல நிக்கவச்சு துப்பாக்கியால சுட்றுவாய்ங்க டோய்!" இப்படியான சிறுபிள்ளை பேச்சுக்கள். கூடவே நிதமும் தெரு முனையில் துப்பாக்கி ஏந்திய சிப்பாய்கள் நிற்கின்றார்களா என்று தேடிக்கொண்டே இருப்பேன். ரேடியோவில் ஆகாஷவாணி டெல்லி செய்தி , முடிந்தவுடன் சீர்காழி கோவிந்தராஜன் "அறுபது கோடி வயிறு நிறைந்திட இருபதம்ச திட்டம் வந்ததம்மா.." என்று பெரும்குரல் எடுத்து பாடுவார்.
பதிலளிநீக்குஅந்தப்பாடலில் ஒரு வரி: அரசாங்க எந்திரம் ஆடம்பரம் இன்றி அன்பு பணி செய்ய வேண்டுமம்மா... இப்போதான் இதுக்கு அர்த்தம் புரியுது... 1970 லேயே யூனியன் கார்பைடு இந்தியாவில் நச்சுவாயு தொழில் தொடங்க அனுமதி கேட்டதாகவும் ஆனால் எமர்ஜென்சி டிக்ளேர் செய்த ஒருசில மாதங்களில்தான் பெரியன்னை இந்திரா காந்தி லைசென்ஸ் கொடுத்ததாகவும் இப்போது தகவல்கள் நாறுகின்றன. பெரியன்னையின் பேரை காப்பத்த விமானத்தில் இருந்து குதித்த சீனியர் சிவப்பழகன் வாரன் ஆண்டர்சன் பத்திரமாக வூடு போய் சேர விமானம் ஏத்தி உட்டதாகவும் தெருத்தெருவாய் நாறுது, நாத்தம் தாங்கல. ஆடம்பரம் இன்றி எந்த மாதிரி அன்பு பணி செய்தாங்கன்னு இப்போதான் தெரியுது. சரி, இன்னொரு விஷயம், இவங்களுக்கெல்லாம் மூத்தவரு பேரு ஜவஹர்லால் அவரு என்ன செஞ்சாருன்னு தெரியனுமா? ஏன்னா அவரு ஒரு இடதுசாரி சோசலிஸ்ட்-டுன்னு இப்போவும் பலபேரு நெனச்சுக்கிட்டு இருக்காங்க. அவரும் ஜேம்ஸ்பாண்ட் போல துப்பாக்கி தூக்குன கதை ரொம்ப பேருக்கு தெரியாது, தெரியனுமா? இங்க போங்க http://www.confederationhq.blogspot.com/ THE FIVE GLORIOUS DAYS OF 1960.
2 ) இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் கல்வியாளர்களும் இப்போது உடனடியா செய்ய வேண்டிய வேலை ஒன்னு உள்ளது: மத்திய மாநில அரசுகளின் பள்ளி கல்லூரி பாடங்களில் இருந்து இந்திரா காந்தி ராஜீவ் காந்தி பற்றிய பாடங்களை உடனடியாக அகற்ற வேண்டும், பள்ளி கல்லூரிகளில் இவர்களது படங்களை நீக்க வேண்டும் என்று ஒரு பிரச்சார இயக்கத்தை தொடங்க வேண்டும். தேசத்துரோகிகளின் படங்கள் நம் பிள்ளைகள் படிக்கும் இடத்தில் எதற்கு? வேண்டுமானால் அம்பானி, டாட்டா போன்றவர்களின் வீடுகளில் இருக்கட்டும், அதுதான் பொருத்தமான இடம். இப்படியே உட்டோம்னா நாளைக்கு வாரன் ஆண்டர்சன் படத்தை இந்தியர்கள் அனைவரும் உடம்பில் முக்கிய பாகங்களில் பச்சைகுத்தனும்னு சட்டம்போட்டாலும் போடுவாய்ங்க.
3 ) சொச்சநீதிமன்றங்கள் இப்போது பச்சையாகவே அமெரிக்க எஜமானை குஷிப்படுத்த அவுத்துப்போட்டுவிட்டு அம்மணமாக நிற்கும்போது, அடுத்த முயற்சியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களை உடனடியாக கலைத்துவிட வேண்டும் என்றும் இனிமேல் இந்தியாவில் அகராதிகளில் நீதி, நியாயம், வழக்கு போன்ற அசிங்கமான சொற்களை நீக்கிவிட புனிதமான (பசுமாடு அல்ல) அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும், எனவும் உத்தரவு இடலாம். எனவே ஏற்கனவே இருக்கின்ற நீதிமன்றக் கட்டிடங்களை என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். அந்தக் கட்டிடங்களை இந்தியாவில் இருக்கின்ற அமெரிக்க முதலாளிகள் கழிப்பறையாக பயன்படுத்த அரசியல்சட்டத்தை திருத்தலாம். அப்படியானால் நாடெங்கும் வீணாக மிஞ்சிப்போகும் லட்சக்கணக்கான கருப்பு அங்கிகளை என்ன செய்யலாம் என்ற கேள்வி எழக்கூடும். அவற்றை இந்தியாவில் இருக்கின்ற அமெரிக்க முதலாளிகளின் காலணிகளை கார்களை துடைக்க பயன்படுத்தலாம். இதற்கு ஒரு விழா ஏற்பாடு செய்யலாம். அதற்கு தலைமை தாங்க வாரன் ஆண்டர்சனை அழைக்கலாம், மந்திரியாக இருக்கும் நேரம்போக மற்ற நேரங்களில் பெரும் பணமுதலைகளுக்கு வக்கீலாக வாதாடும் தொழிலை செய்யும் ப.சிதம்பரம் இந்த விழாவில் தனது கருப்புகோட்டால் வாரன் ஆண்டர்சனின் செருப்பையும் முடிந்தால் அவனது ஆசனவாயையும் துடைத்து விழாவை தொடங்கி வைக்கலாம். இதற்கு உலகவங்கி ஏஜெண்டும் அமெரிக்காவின் இந்திய அடிமை நம்பர் ஒன் ஆன மன்மோகன் சிதம்பரத்துக்கு உதவி செய்யலாம்.
இக்பால்
அன்புள்ள இக்பால்.
பதிலளிநீக்குகடிதத்திற்கு மிகப்பொருத்தமான தரவுகளை அல்லது பின்னணி விளக்கங்களை அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். இந்திய அரசாங்கத்தின் மெத்தனத்தை என்னவென்று சொல்வது? வயிறு எரிகிறது இக்பால்.
கொஞ்சநேரத்திற்கு முன்புதான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அபிஷேக் சிங்வி எப்படியெல்லாம் அரசாங்கத்திற்காகச் சப்பைக்கட்டு கட்ட முயன்று தோற்றுப்போகிறார் தெரியுமா? பிரளய நெருப்பை அரைக்குவளைத் தணணீரைக்கொண்டு அணைக்க நினைக்கும் அலட்சியத்தனத்தின் அசிங்கத்தை.
எப்படியெல்லாம் கண்ணீரைக்கொண்டு கட்டி வளர்த்த விடுதலையை மக்களுக்கு எதிராகவே பயன்படுத்துகிறார்கள் இந்த அரசியல் பயங்கரவாதிகள். மகாஅயோக்கியர்களையும் மன்னித்துவிடுசிற மக்கள்.
என்னசெய்வது?