கவி உலா **************** நா.வே.அருள் கவிஞர்கள் முகம் பார்ப்பதில்லை; வலி பார்க்கிறார்கள். பூ பார்ப்பதில்லை; மணம் நுகர்கிறார்கள். நிறம் பார்ப்பதில்லை; நிஜம் பார்க்கிறார்கள். நாம் பார்த்ததைத்தான் அவர்களும் பார்க்கிறார்கள். ஆனால் நமக்கு எதையெதையோ காண்பிக்கிறார்கள்…. ஒரு கவிதையோ…. ஒரு கவிதையில் சில வரிகளையோ…. உங்கள் முன் படைக்கிறேன். அனைத்துக் கவிஞர்களுக்கும் நன்றி. இன்றைய உலாவில் சில கவிதைகள் இந்த வினாத்தாள்கள் ஏன் இப்படி உயிர் பறிக்கின்றன விடை தெரிந்த வினாக்கள் ஏராளமிருக்க சூழ்ச்சிகளே வினாக்களான பின்…. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, தேர்வுகளைத் தீ தின்னும் காலம்…. இப்போதைக்கு முடிந்ததெல்லாம் தனித்த குரல்களையெல்லாம் கூட்டுக் குரல்களாக்குவதுதான் க.அம்சப்ரியா Punnagai Amsapriya ***** கறையான் புற்றை சிதைத்துவிட்டு மழைத்துளியில் அலகு துடைக்கிறது தவிட்டுக் குருவி சிறுமி குலுக்கி விளையாடும் கூழாங்கல்லில் ஓடும் நதியின் சப்தம் கவி.விஜய் **...