இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
அநாதைகள்  வார்த்தைகளை ஸ்வீகரித்துக்கொள்ளத் தயாரில்லை  மேலும்  கவளம் கவளமாய் விழுங்கிக்  களைப்படைந்துவிட்டன காதுகள்  அதுவும்  நடிப்புச் சுதேசிகளின்  நாடக வார்த்தைகள்!!....                          =நா. வே. அருள் 
       பூமி   அம்பேத்கர் அண்ணலுக்கு - சாதி        அநியாயம் நடந்த கதை  இம்மண்ணில் கண்ணீரே - வடிஞ்சி       இல்லாமல் போன கதை  வெளையாட்டு பருவத்துல - அண்ணனோட       வெளியூரு போகையிலே  துளியூண்டு தண்ணி இல்லே - கட்டு       சோறு தின்ன வழியுமில்ல  ஒழக்குத் தண்ணீரை - அங்க       ஒரு பயலும் கொடுக்கவில்ல  கிழக்குச் சூரியனை - எந்தக்       கிணறும் ஏற்கவில்ல  நாய்குடிக்கத்  தண்ணீரை -ஒரு       நாலு அண்டா வச்சவனோ  தீப்பிடிச்ச நாக்கால - அவரைத்       துரத்தி அடிச்சுப்புட்டான்  குட்டையில குடிப்பதற்கு - தண்ணி       குவிஞ்ச கையில் எடுக்கையிலே  வெட்டை மிதந்து வரும் - பத்து       வெரலுக்கும் வாந்தி வரும்  பள்ளியில சமமாக - வகுப்பில்       பக்கத்துல  குந்...