என் நண்பனின் அப்பாவும் சாய்வு நாற்காலியும்
"அறையில் மங்கலான வெளிச்சத்துல என் நண்பனின் அப்பா சாய்வு நாற்காலியில் படுத்துக்கிட்டிருந்தார். பக்கத்துல நண்பனின் அம்மா. தூண் ஓரமா நண்பனும் நானும் நின்னுக்கிட்டிருந்தோம். பின்னால் வங்கி மேலாளர். " எத்தனை வருசமானாலும் இன்னும் என் மனசுக்குள் ஆழமாப் பதிஞ்சிருக்கிற ஒரு காட்சி. அன்றைக்கு தொலைக்காட்சியில ஒரு நிகழ்ச்சியைப் பாத்துக்கிட்டிருக்கரப்போகூட திடீர்னு அந்தக்காட்சி மீண்டும் தோன்றி மறைந்தது. அன்றைய தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி... கலர் கலராக் காட்சிகள் திரையில் விரிந்தன...பெரீய்ய... மைதானம் ...வரிசை வரிசையாக் காருங்களா நின்னுக்கிட்டிருந்திச்சுங்க. எல்லாக் காருலயும் கொழந்தக் குட்டிங்களோட பெரியவுங்க குடும்பம் நடத்திக்கிட்டிருந்தாங்க. டிவிப்பெட்டியில இதக்காட்டி அமெரிக்காவுல வீட்டுக்கடனைத் திருப்பிக்கட்ட முடியாதவங்களை வீட்டைவிட்டே தொரத்திட்டாங்கலாம். அவங்கதான் கார் வீடுகள்-ல தங்கிக்கிட்டிருக்காங்கலாம். அங்கு இருந்த ஒவ்வொரு காருக்குள்ளும் என் நண்பனின் அப்பா சாய்வு நாற்காலியில் படுத்துகிட்டிருக்கிற மாதிரி தோணுச்சி. எம்மாம்பெரிய்ய அமெரிக்காவுல இப்பிடிகிகூட நடக்குமா? ஆச்சிரி...