கவிதை அலசல் / நா.வே.அருள் ************************************** எங்கள் பொங்கல் உப்புக் கரித்திருந்தது கவிதை . சோலை மாயவன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ உழவனின் பொங்கல் ஏன் உப்புக் கரிக்கிறது? மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் அதிக வித்தியாமில்லை. மாடுகளுக்குக் கொட்டகைகள். மனிதர்களுக்கு வீடுகள். மாடுகள் முளைக்குச்சியில் கட்டப்பட்டிருக்கும். மனிதர்கள் உறவுக் குச்சியில் கட்டப்படாமலேயே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். மாடுகள் தீனியை அசை போடுகின்றன. மனிதர்கள் பசியை அசைபோடுகிறார்கள். மாடுகளுக்கு மனிதர்கள் தண்ணீர் காட்டுகிறார்கள். மனிதர்களுக்கு வாழ்க்கை தண்ணீர் காட்டுகிறது. மாடுகளின் கழுத்துகளில் நுகத்தடிகளின் வடு. மனிதர்களின் கைகளில் காய்ப்பு காய்த்த தடம். மாடுகளுக்குக் கொம்புகள் இருக்கின்றன. மனிதர்களுக்கு அதுவுமில்லை. உழவன் விதைநெல்லைப் போல வற்றிப் போய் இருக்கிறான். அவனுக்கு உழவு மாடுகள்தான் உண்மையான உறவு. வயலோடுதான் வாழ்க்கை. பயிர் பச்சிலோடுதான் பாசம...
இடுகைகள்
2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது