காதலிக்கும் காதல் ••••••••••••••••••••••••••• அன்னா தஸ்தயேவ்ஸ்கியின் ”நினைவுக்குறிப்புகள்” வாசித்து முடித்த இந்தத்தருணத்தில் நான் உணர்ச்சிகளின் கொந்தளிப்பால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறேன் என்றுதான் என்னால் சொல்லமுடியும். இந்த நொடியில் எனக்கு இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது. அன்னா தஸ்தயேவ்ஸ்கி என்னுடைய இலக்கியத் தாயாகி விட்டாள். இந்தப் புத்தகத்தை வாசிக்காதவர்களுக்கு ஓர் வேண்டுகோள்….இந்த மேற்கோள் வரிகளை ஒருமுறைப் படியுங்கள். ”….அன்னா, அந்த ஓவியன் நான்தான் என்று நினைத்துக்கொள்… நான் உன்னிடம் என் காதலைச் சொல்லவும் செய்கிறேன் எனில், நீ வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பாயா? சொல்… உன் பதில் என்னவாக இருக்கும்?...” இந்த வாசகத்தை இப்போது வாசித்துவிட்டீர்கள் அல்லவா?...அந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள். யூமா.வாசுகி அவர்களின் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள அந்து நூலின் எழுபத்தோராம் பக்கத்தில் மீண்டும் மேற்குறித்த...
இடுகைகள்
செப்டம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது