சுந்தரபுத்தனின் ”மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு” ஏதோ ஒரு பகலில் கவிஞர், கலை விமர்சகர் இந்திரன் வீட்டில்தான் சுந்தரபுத்தன் எனக்கு அறிமுகம் ஆனது. அங்கங்கே பார்த்துக்கொண்டால் ”அலோ” சொல்லிக்கொண்டதுண்டு. அப்புறம் நுங்கம்பாக்கம் ஸ்ரீபவன் ஓட்டலில் வைத்து கவிஞர் வசந்தகுமாரனுடன் வைத்து மதிய உணவு. பிறகொருநாள் பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் என்றும் வெங்கட் நாராயணா சாலையில் எழுத்தாளர் ஜெயகாந்தன், தீராநதி மணா கலந்து ”வார்த்தை” இதழ் வாசகர் கூட்டம் ஒன்றில் என அங்கும் இங்குமாகச் சில தேநீர்த்தித்திப்புச் சந்திப்புகள். அவரை எனக்குத் தெரிந்த அளவுக்கு அவர் என்னை ஞாபகம் வைத்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை. நிற்க. முகநூலில் பார்த்து நானாகப் போன ஒரு விழாவில்தான் அவரது ”மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு” வெளியிடப்பட்டது. மனம் நிறைந்த பேச்சுகளாக இருந்த கூட்டம். இனி நூல் குறித்து. பின்னட்டையில் பதிப்புரை தவிர முன்னுரையோ அணிந்துரையோ இல்லாத புத்தகம். எனக்கென்னமோ அகதி முகாமில் இருக்கும் இலங்கைத் (ஈழத்) தமிழன் போல் பட்டது. அதற்கேற்றாற்போல் இந்தப்புத்தகத்தின் முதல் வரியே முள்ளிவாய்க்கால் என்றுதான் தொட...
இடுகைகள்
ஜூன், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது