or enthira idayanukku
ஓர் எந்திர இதயனுக்கு அன்புள்ள எந்திராதிபதி கலாநிதி மாறன் அவர்களுக்கு ஒரு சின்னத்தயாரிப்பாளர் சிக்கமாட்டாரா என்று காலம் பூராவும் ஒன்லைன்களைச் சொன்னபடி காத்துக்கொண்டிருக்கும் ஓர் உதவி இயக்குநர் எழுதிக்கொள்ளும் மடல் . எந்திரனின் வெற்றிக்களிப்பில் மிதந்து கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த கடிதத்தை வாசிக்க நேரம் கிடைக்காமல் போகலாம் . மிகப்பெரிய கலைச்சேவை செய்த்தாகத் தமிழகத்தைப் (பொய்) பேச வைத்திருக்கும் உங்களுக்கு இந்தக்கடிதம் சங்கடத்தைக் கொடுக்கலாம். ஒரு கதையை வைத்துக்கொண்டு தயாரிப்பாள ர்களின் வாசல்களில் மீனுக்குக் காத்துக்கொண்டிருக்கும் கொக்குபோல கோடம்பாக்கத்து பிரம்மச்சாரி விடுதி ஒன்றில் தங்கியிருந்தபடியே ஏதாவது துரிதஉணவகம் ஒன்றில் ஒன்றும் பாதியுமாக வயிற்றை ரொப்பிக்கொண்டு ஒன்பது வருஷங்களாகக் குடியிருக்கும் ஒரு உதவி இயக்குநருக்கு உங்களிடம் சொல்ல ஏராளம் இருக்கிறது . ஆடியோ கேசட் வெளியீடு மலேசியாவில் நடந்தபோதே கோடிக்கணக்கில் பணம் பார்த்துவிட்டதாகத் தகவல் . இதுவரையில் வேறுயாரும் டிரெய்லருக்கு டிக்கட் போட்டு பணம் வசூல் பண்ணதாகத் தெரியவில்லை . எல்லாவற்று...