கனடா பயணக் குறிப்புகள் ஓடுதளத்தில் ஒரு பொம்மை விமானம் சென்னை விமான நிலையத்திற்குள் நுழைகிறபோதே பதற்றம் தொற்றிக்கொள்கிறது. இனம் தெரியாத உணர்வு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. வழியனுப்ப வந்தவர்களும் பயணம் செய்ய இருப்பவர்களும் உணர்ச்சியில் ஊஞ்சாலாடிக் கொண்டிருந்தார்கள். காமிரா முன் நின்று போஸ் கொடுப்பவர்களும் கட்டித் தழுவிக்கொள்பவர்களுமாக விமான நிலையம் உணர்ச்சியில் உறைந்து கொண்டிருந்தது. எங்களுக்கு முதல் வெளிநாட்டுப் பயணம். மகன் அருள்பாரதியின் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளத்தான் நானும் என் மனைவி ஹேமாவதியும் கனடாவை நோக்கிப் பறக்க இருந்த காத்தே பசிபிக் விமானத்திற்காகக் காத்திருந்தோம். மகன் அருள்பாரதி சாய்ராம் பொறியியல் கல்லூரியில் கணினித் துறையில் பொறியியலாளராக ஆகிக் கனடாவில் கணினி அறிவியலில் எம் எஸ் படிப்பு. சைமன் பிரேசர் பல்கலைக் கழகம். மேற்படிப்பு முடிய ஆறுமாதம் இருக்கிறபோது மகன் விரும்பிய பெண்ணைத் திருமணமும் முடித்தாயிற்று. அருள்பாரதியும் மருமகள் விஜய்தாவும் இப்போது கனடா வான்கூவர் நகரத்தில் தங்கள் இல்லறத்தைத் தொடங்கியிருக்கிற...
இடுகைகள்
ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது